கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது.
அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் வேல்முருகன். இதையடுத்து எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவரது முகத்தில் விழ கயிறை விட்ட வேல்முருகன் கிணற்றினுள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா கரூர் மாவட்ட காவல் நிலையத்தில் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புறா பிடிக்க சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.