Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாதுஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது அலி பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது அலி பாத்திமா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுஷா இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செய்யது அலி பாத்திமாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து செய்யது அலி பாத்திமாவுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

Categories

Tech |