Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக சாமியார் நித்தியானந்தா மீது கடந்த புதன்கிழமை குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நித்தியானந்தாவின் ஆசிரமத்தை நிர்வகித்து வந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக அகமதாபாத் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.தன் மீதான குற்றச்சாட்டு குறித்து நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘எனது அனைத்து குரு குலத்திலும் தங்கியுள்ள குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம். அதற்காக, குருகுலங்கள் எப்போதும் திறந்தே இருக்கிறது. நான் இப்போது இமயமலையில் இருக்கிறேன்,’ என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |