பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என சங்கத்தின் தலைவர் எஸ்.கே. வேலு அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதியை மாற்றவேண்டும், கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வக்கீல்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
அதன் அடிபப்டையில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் போன்ற நீதிமன்றங்களில் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 1000 வக்கீல்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.