லண்டன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வீதிகளிலும் வண்ணமயமான விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகரான லண்டனில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெவ்வேறான நாட்களில் ஒவ்வொரு வீதிகளிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் தற்போது முதல் தடவையாக அனைத்து வீதிகளிலும் ஒரே சமயத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. தி ஆர்ட் ஆஃப் லண்டன் பிசினஸ் அல்லயனஸ் என்ற உள்ளூர் வணிக அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஆக்ஸ்போர்டு வீதியில், நட்சத்திரத்தின் வடிவத்தில், விளக்குகளை வடிவமைத்து ஒளிர வைத்துள்ளனர். இது தொடர்பில் வணிகர்கள் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது குறைந்துவிட்டது. இந்நிலையில், உள்ளூர் மக்களை சாப்பிங் செய்வதற்கு, இந்த வண்ண விளக்குகள் கவந்திழுக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.