Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

JUST IN: தோல்வியில் தான் நாங்கள் கற்று கொண்டோம்…. தோனி…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், எம்.எஸ் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வர் முக ஸ்டாலினிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை சீனிவாசன் அவரிடம் வழங்கினார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தோனி, தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. வெற்றி பெறும்போது எல்லாம் சரியாகத்தான் இருக்கும். தோல்வியில்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |