தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. அதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாகர் கோவில் -திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம் – திருவனந்தபுரம், நாகர்கோவில்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- நாகர்கோவில், திருவனந்தபுரம் – நாகர்கோவில் மற்றொரு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.