‘வெந்து தணிந்தது காடு’ டீசர் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சிம்பு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவருடன் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இதனையடுத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் ‘மாநாடு’ படத்தின் வெளியீடன்று வெளியாகும் என வதந்திகள் பரவி வந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், ”இது மாநாடுக்கான நேரம், வெந்து தணிந்தது காடு இன்னொரு நாளில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
It's #Maanaadu time 🔥👌#VTK will comes in another day with another plan 👌 pic.twitter.com/HAkLrkOeGQ
— praveenstr (@PraveenVdm) November 20, 2021