Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்…. “நானும் ஆடியிருக்கேன்”…. தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!!

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் சிஎஸ்கே  வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஐபிஎல் கோப்பையை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  தோனியும், உரிமையாளர் சீனிவாசனும் வழங்கினார்கள்… மு.க.ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை வழங்கினார் மகேந்திர சிங் தோனி.. அதேபோல தோனிக்கு நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள். தோனியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன்.. எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர். எனது தந்தை கருணாநிதி எனது பேரப் பிள்ளைகள் என எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள் தான். தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர்.. எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம் உண்டு நானும் விளையாடி உள்ளேன்.

தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் என்று இருந்தாலும் தமிழகத்தின் செல்ல பிள்ளை ஆகிவிட்டார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் யாராலும் மறக்க முடியாது.அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி தான்.

சாதாரண பின்புலத்துடன் உச்சம் தொட்ட தோனி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல சீசன்களில் தோனி விளையாட வேண்டும்.. தோனி பல ஆண்டுகள் சி.எஸ்.கே. கேப்டனாக நீடிக்க வேண்டும். ஒன்ஸ் மோர் கேளுங்க … மீண்டும் சொல்கிறேன் என்று கலகலப்பாக பேசினார்.

மேலும் எப்போதும் இலக்கு தான் முக்கியம் அதை அடைய உழைப்பு தான் மிக மிக முக்கியம் சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள் நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம் என்று பேசினார்..

Categories

Tech |