குஜராத் ஜாம்நகரை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. தெரியாத எண்ணில் இருந்து போன்கால் வந்ததுள்ளது. போனை ஆன் செய்ததும் திரையில் ஒரு பெண் தோன்றியுள்ளார். திடீரென படபடப்பான அந்த பெண் வேறு நபருக்கு அழைப்பதற்கு பதிலாக உங்களுக்கு அழைத்து விட்டேன். மன்னித்துவிடுங்கள் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதன்பின்னர் அந்தபெண் அந்த இளைஞரிடம் தொடர்ந்து பேசியுள்ளார். தன்னுடைய பெயர் ஜீனத் என அறிமுகமாகியுள்ளார்.
34 வயதான அந்த இளைஞர் தான் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாக அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளார். உங்களுக்கு ஏற்ற வரன் நான் தேடித்தருகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் தன்னுடைய அப்பார்ட்மெண்ட் வரும்படி கூறியுள்ளார். உங்களுக்காக வரன் பார்த்துள்ளேன் அவர்களும் வந்துவிடுவார்கள் நீங்கள் பேசிவிட்டு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
அந்தப்பெண்ணின் பேச்சைக்கேட்டு இவரும் அந்த இடத்துக்கு தனியாக சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லை அந்தப் பெண் மட்டும் இருந்துள்ளார். பேசிக்கொண்டிருக்கலாம் வந்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். அந்தப்பெண்ணின் பேச்சு மெல்ல திசைமாறியுள்ளது. இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்துள்ளனர். அந்த இளைஞர் நிர்வாணமாக இருந்த போது அந்த வீட்டிற்குள் திடீரென இருவர் நுழைந்துள்ளனர். அந்தப்பெண்ணின் அத்தை மாமா எனக் கூறியுள்ளார்.
நிர்வாண நிலையில் இருந்த இளைஞரை புகைப்படம் எடுத்துள்ளனர். எங்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தாய் என போலீசில் புகார் அளித்துவிடுவோம். உன் மீது புகார் அளிக்கக்கூடாது என்றால் ரூபாய் 4 லட்சத்தை கொடுத்துவிட்டு இங்கிருந்து போகலாம் என மிரட்டியுள்ளனர். என்னிடம் அவ்வளவு பணமில்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார். பணம் கொடுக்காமல் இங்கிருந்து நகர முடியாது. இல்லையென்றால் போலீசில் புகார் கொடுத்து விடுவோம் எனக் கூறி மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து 1.5 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவரை அனுப்பியுள்ளனர். அந்த இளைஞர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தன்னை ஏமாற்றிய நபர்களின் புகைப்படங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூன்று பேரையும் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.