பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாமை மாற்றியமைக்க வேண்டும், தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும், செவிலியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
இதனையடுத்து கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு தாய்-சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டு ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.