டான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
https://twitter.com/Dir_Cibi/status/1461985593865347073
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று பிரியங்கா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் பெயரை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படத்தில் அவர் அங்கயற்கன்னி என்ற பெயரில் நடித்துள்ளார். மேலும் டான் படப்பிடிப்பில் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.