செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது செவிலியர் சங்க தலைவரான பழனியம்மாள் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து செவிலியர் சங்கத்தின் ஏழு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் செவிலியர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.