சாலை விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமசுப்பு பணி முடித்து விட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு வழி சாலையில் திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ராமசுப்புவின் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராமசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமசுப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.