Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ள நீரில் மூழ்கிய சாலை…. அடித்து செல்லப்பட்ட இருவர்…. இளைஞர்களின் செயல்….!!

வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற மூதாட்டியும் அவரின் 6 வயது பேத்தியும் சாலையை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் அவரின் பேத்தியையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை போல் நரசிங்கபுரத்திலிருந்து பால் ஏற்றி கொன்று ஆலங்காயம் நோக்கி சென்ற லாரி வெள்ளத்தில் சிக்கி உள்ளது. பின்னர் அதிர்ஷ்டவசமாக லாரி சாலையை கடந்து சென்றுள்ளது.

Categories

Tech |