Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி….!!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக சிறுமியின் அம்மாவுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மாணவி எழுதியுள்ள ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பெண் நானாக தான் இருக்க வேண்டும். என்னை இந்த முடிவை எடுக்க வைத்தவர்கள் யார் என்று கூறுவதற்கு பயமாக இருக்கிறது. இந்த பூமியில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் இப்போது பாதியிலேயே போகிறேன். இன்னொரு முறை இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். வளர்ந்து நிறைய பேருக்கு செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் அது முடியவில்லை. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா உங்க அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் உங்களிடம் சொல்லாமல் போகிறேன்.

மன்னித்துவிடுங்கள் இனி எந்த ஒரு பெண்ணிற்கும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |