பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12 – ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.