Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு…. எம்.எல்.ஏ-க்களின் ஆய்வு….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலதிகாமணிபெண்டா என்ற மலை பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பாதை வழியாகத்தான் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தேவராஜபுரம் மற்றும் குப்பம், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோளாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா உள்பட 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அதன்பின் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற தொடர் கனமழை காரணத்தினால் மலைப்பாதை ஐந்தாவது வளைவு பாதையில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தினால் இவ்வழியாக வருகின்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை அடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை போல் வாணியம்பாடி பொன்னியம்மன் கோவில் பின்புறத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோரப் பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் மின்டிரான்ஸ்பார்மர்கள் அடியோடு சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ-க்கள் செந்தில்குமார் மற்றும் தேவராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |