Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. திடீரென வெளிட்ட அரசாணை….!!

தமிழக சட்டப்பேரவையின் போது முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.  இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை செயலர் மாணிக்கவாசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக புதிய அணுகு முறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கணம், செயல்வழி கற்றல், புதிய பாடத்திட்டம், ஆங்கில பேச்சாற்றல், கணினி மற்றும் அறிவு திறன் ஆகிய 35 பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1464 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று தங்களின் கற்பித்தல் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.

அதனைத் தொடர்ந்து சமூக மற்றும் பொருளாதார அளவில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று கல்வி உதவித்தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கி வருகிறது. அதன்படி சிறுவயதிலிருந்து மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம், பேச்சாற்றல் மற்றும் கணினி போன்றவற்றை கற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |