கார்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழநத்தம் பஞ்சாயத்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கீழநத்தம் செல்வதற்கு மொபட்டில் ஆறுமுகம் நான்கு வழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு வழிச் சாலை விலக்கில் திரும்பும்போது பின்னால் வந்த கார் ஒன்று ஆறுமுகம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து காரை ஓட்டி வந்த சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.