இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் மாரிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிச்சந்திரா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவரும் இவரது தாயார் சரஸ்வதியும் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த சரஸ்வதியும் மற்றும் அங்கிருந்தவர்களும் கத்தி கூச்சல் போட்டனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த ஹரிச்சந்திராவை உடனடியாக மீட்டனர். இந்நிலையில் மயக்க நிலையில் இருந்த ஹரிச்சந்திராவை அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிச்சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.