ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு துறைக்கு இன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி விரைந்து வந்த பாதுகாப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு தீவிரவாதிகள் உள்ளனரா? என்று தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 60 பேர்கள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று ராணுவத் துறை தெரிவித்துள்ளது.