பிரித்தானிய மகாராணியாரின் உடல்நிலை தொடர்பில் வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
பிரித்தானிய மகாராணியார் 22 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மக்களிடையே சோகம் ஏற்பட்டதோடு மகாராணியாரின் உடல்நிலை குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் புகைப்படங்கள் திடீரென வெளியாகியுள்ளது. அதில் காணப்பட்ட மாறுதல்கள் பிரித்தானிய மக்களிடையே மகாராணியார் உடல்நிலை குறித்த சந்தேகத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது மகாராணியாரை ஜெனரல் சர் நிக் கார்ட் சந்திக்கும் புகைப்படம் ஒன்றை அரண்மனை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் மகாராணியாரின் கைகள் ஊதா நிறத்தில் இருப்பது போல் தெரிந்துள்ளது. ஆனால் அரண்மனை வட்டாரங்கள் மகாராணியார் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன. இருப்பினும் பலவீனமான தோல், ரத்த ஓட்டம் இல்லாமை, தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் ரத்தக்கசிவு ஆகிய காரணங்களால் மகாராணியாரின் கைகள் ஊதா நிறமாக மாறியுள்ளதாக ஷேக்ஸ்பியர் மருத்துவ மையத்தின் மருத்துவர் ஜெய் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.