Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் இராசிக்கு… “இல்லம் தேடி நல்ல செய்தி வரும்”.. பணத்தை எண்ண வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது. இன்று மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் திரு அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லும் நாள்.

இந்த அற்புதமான நாளை பயன்படுத்தி நாமும் குபேரருடன் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் செழிப்பாக இருக்கும். கிரிவலம் செல்ல முடியாத நண்பர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 :30 மணிக்குள் குபேரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மற்றும் சிவபெருமானையும் மனதார வணங்குங்கள். ஏழு தலைமுறைக்கு உங்களுக்கு செல்வம் செழிப்பாக இருக்க வேண்டும். இந்த நாளை நீங்கள் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |