Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டம் வாபஸ்… புதுசாக கொண்டாடிய காங்கிரசார்…!!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனை காங்கிரஸ் கட்சி கொண்டாடும் வகையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் அவரின் அலுவகத்தில் இருந்து குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று மகிழ்ச்சியாக கொண்டாடினர். மேலும் அந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை மோடி திரும்பப் பெற்றதை காங்கிரஸ் கட்சி போராட்டம் வெற்றி பெற்றது என்று கோஷங்கள் எழுப்பினர்.

இந்த மகிழ்ச்சி பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஸ்ரீனிவாசன், நவின், அருள், சபிதா, மகேஷ் லாசர் மற்றும் கால பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டம் மாராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கணினி வழங்கினார்.

Categories

Tech |