Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “நண்பர்களின் ஆதரவு பெருகும்”.. பேச்சில் நிதானம் இருக்கட்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். அஞ்சல் வழியில் அனுகூல  செய்திகள் வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காண்பீர்கள். இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். நெருங்கிய நண்பரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும்.

குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்வார்.

இந்த கிரிவலத்துடன் நாமும் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வச் செழிப்பு இருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அண்ணாமலையாரையும் குபேரரையும் நாமும் தரிசித்து விட்டு கிரிவலம் மேற்கொண்டு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். தயவு செய்து இந்த நாளை மட்டும் நீங்கள் தவற விடாதீர்கள். அதுபோலவே கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30க்குள் குபேரரையும் சிவபெருமானையும் வழிபட்டு செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |