ஆப்கானிஸ்தானில் 20 சதவீத சிறுவர்கள் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20% சிறுவர்கள் வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடைபெற்ற போர் காரணமாக ஏராளமான குடும்பங்கள் தங்களது உடைமைகளை இழந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
எனவே குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக அந்நாட்டில் சிறுவர்கள் பலரும் ஷூ பாலிஷ் செய்தும், கார்களை துடைத்தும், குப்பை கூளங்களில் இருந்து மறுசுழற்சிக்கு தேவைப்படும் பொருட்களை சேகரித்தும், தின்பண்டங்கள் விற்றும் வருமானம் பெற்று வருகின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.