கரூர் மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை பட்டம் வழங்குவதுடன், வீட்டுமனை பட்டா அல்லது சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பல உதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முன் வரும் ஆண்களை ஊக்குவித்து கௌரவிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக கரூர் மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கௌரவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
Categories