வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது
வங்காளதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி தக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் – அஃபிஃபி ஹொசைன் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னில் சுருண்டது .இதில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃபிரிடி, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதன்பிறகு 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த பகர் சமான் – முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பகர் சமான் அரைசதம் கடக்க, ரிஸ்வான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார் .இறுதியாக பாகிஸ்தான் அணி 18.3 ஓவரில் 109 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.