கன்னிராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். உங்களை விட்டு விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேரக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மனக்கவலை நீங்கும் நாளாகவும் இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவரின் செயல் திறமையும் வெளிப்படும்.
சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச் செல்லும். இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள்.
இந்த நாளில் நாமும் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் தரிசித்து குபேரருடன் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் நிலைத்து நிற்கும். தயவுசெய்து இதை நாம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். அதுமட்டுமில்லாமல் கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் தரிசிப்போம். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்வோம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்