Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நட்பு பகையாக கூடும்”.. மன கவலை இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்க மறுப்பார்கள். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாக கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை எந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மனக் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு காரியத்தைச் செய்யுங்கள். உங்களுடைய மனதிற்கு அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். ஏதேனும் ஒருவகையில் மன கவலை இருந்துக்கொண்டே இருக்கும். நட்பு ரீதியில் உங்களுக்கு சில வாக்குவாதங்கள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். கூடுமானவரை உடல் நிலையில் கவனம் இருப்பது ரொம்ப நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உண்ணும்படி நேரலாம். எதிலும் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தைச் செய்யும் போதும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் குபேரருடன்  நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு செல்வம் நிலைத்து நிற்கும். இன்றைய நாளை நாம் கிரிவலம் சென்று பயன்படுத்திக்கொள்வோம். கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். அப்படியும் முடியாதவர்கள் இன்று மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் மனதார வழிபட்டு உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |