டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடும் ரோகித் சர்மா அதிகமுறை 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் .
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர்.இதில் கே.எல்.ராகுல் 65 ரன்னும் ,ரோகித் சர்மா 55 ரன்னும் எடுத்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் கண்ட ஒரு குறிப்பிட்ட ஜோடியாக பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர் .
இவர்கள் மொத்தம் 22 இன்னிங்ஸில் விளையாடி ஐந்து முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர் .இந்த நிலையில் இந்திய அணியில் ரோகித்-கே.எல்.ராகுல் ஜோடி 27 முறை ஜோடியாக இணைந்து விளையாடியதில் ஐந்து முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ,பாபர்-ரிஸ்வான் சாதனையை சமன் செய்துள்ளனர் .இதற்கு முன்பாக ரோகித் ,ஷிகர் தாவானுடன் இணைந்து நான்கு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.