Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “மதிப்பும் மரியாதையும் உயரும்”.. போட்டிகள் குறையும்.!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும்.. குடும்ப பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணத்தால் பலன் உண்டாகும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும்.

பெண்களுக்கு மன கவலை கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் பெண்கள் இன்று கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். கூடுமானவரை மனதார தெய்வத்தை வணங்கி இன்று காரியத்தை எதிர்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவன்ராத்திரி  குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.

அதாவது குபேரர் திரு.அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்முடைய ஏழு தலைமுறைக்கும் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி கிரிவலம் செல்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள்  குபேரரை வழிபட்டு  சிவபெருமானையும் வழிபட்டு உங்களுடைய செல்வச் செழிப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |