தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு என்று பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம்.
இதனைப் போலவே திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த புதிய உத்தரவால் தடுப்பூசி போடாதவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இப்போது இடங்களுக்குச் செல்ல முடியாது. அதிகாரிகளின் நடவடிக்கை மேலும் தீவிரமடையும் போது எந்த நேரத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்க நேரிடும். இவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு இன்று ஏற்படுத்தி தந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே இதனைப் பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி போடாத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.