ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த முதியவர் நல்லம்பள்ளி அருகே கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி என காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் காசிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் முதியவர் காசி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.