பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு நாட்டின் முன்னேற்றத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமான ஒன்று தூய்மை இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் படி மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் திட்டம் மக்களை விரைவில் அடைந்தது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த மாதத்தில் தூய்மை இந்தியா 2.0 என்ற புதிய திட்டம் வெளியிடப்பட்டது.
மேலும் கூடுதலாக நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் அம்ருத் 2.0 என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் புதுடெல்லியில் விருது வழங்கும் விழாவை நடத்தியது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய நகரங்களின் தூய்மை நகரமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை செய்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட விருதுகளில் தமிழகத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பெற்றுள்ளது. இதற்காக அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே சிறப்பாக செயலாற்றிய சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.