Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்… மாணவி எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ஏளூர் புதுபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மவுனிஷா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மவுனிஷா சரிவர படிக்காமல் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று வந்தார். இதுகுறித்து மவுனிஷவை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மகள் மயங்கி கிடப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மவுனிஷவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் மவுனிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புதுசத்திரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |