‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ஆரம்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த சீசனுக்கான பின்னணி வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.