மணல் மூட்டைகளை கடத்தி செல்ல முயன்ற சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் 70 மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வாகன டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், காட்டுபுதூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து மணல்கடத்தல் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் சரக்கு வாகனத்தையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.