பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் நாட்டிற்கு வந்திருப்பதை அறிந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதி, விமான நிலையத்திற்கு சென்று, இது பற்றிக் கூறியபோது, சிரித்த விமான பணியாளர்கள், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
அடுத்த விமானம் நான்கு நாட்கள் கழித்து தான், என்பதால் மீதமிருக்கும் மூன்று நாட்கள் அங்கு தங்க பணம் செலுத்தியிருக்கிறார்கள். அதன்பின்பு அவர்களின் மகன் உதவியால், மீண்டும் பிரிட்டன் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்களின் மகன் தெரிவித்துள்ளதாவது, இதனை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
இச்சம்பவம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பிற்கான பற்றாக்குறையை காட்டுகிறது. இது என் பெற்றோருக்கு கடும் கவலை மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. என் அம்மாவிற்கு ஏற்கனவே மன உளைச்சலும், பதற்றமும் உண்டு. அவர் கிரீஸ் நாட்டில் இருந்து அழுதபடி என்னிடம் பேசியது வேதனையை ஏற்படுத்தியது.
மேலும், இதற்காக, 1100 பவுண்டுகள் செலவாகி இருக்கிறது. ஆனால் இதற்காக Ryanair நிறுவனம், மன்னிப்பு கேட்கவும் இல்லை. இழப்பீடு அளிக்கவும் மறுத்துவிட்டது என்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் Ryanair நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, தகுந்த விமானத்தில் தான் இருக்கிறோமா? என்பதை வாடிக்கையாளர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். அது அவர்களின் பொறுப்பு. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.