ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தார்.. அப்போது, பைக்கில் இருவர் ஆடு திருடி செல்வதை பார்த்துள்ளார்.. இதையடுத்து கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கிய நிலையில், அவரை அந்த கும்பல் கீரனுர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.. இது தொடர்பாக முன்பு ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
ஆடு திருடிய யார் யாரெல்லாம் சிக்கி உள்ளார்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. மேலும் பள்ளத்துபட்டி பஞ்சாயத்து அலுவலக சிசிடிவி கேமரா காட்சிகள் முதல்கட்டமாக கிடைத்துள்ளது. அதில், குற்றவாளிகள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வது, அவர்களை துரத்திக் கொண்டு பூமிநாதன் செல்வதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.. இன்று அதிகாலை 2 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது..
தடவியல் நிபுணர்கள் இருசக்கர வாகனத்தின் டயர் அச்சு, கைரேகை, கால்தடம் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்… ஒருபுறம் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது..