தமிழகத்தில் கவிமணி விருது பெற இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஒவ்வொரு வருடமும் 3 பேரை தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
அதன்படி விருது பெறுவதற்கு பொது நூலக இயக்ககம், இளம் படைப்பாளர்கள் இடமிருந்து தமிழில் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள், www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இருந்து, சுய விபர படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.