குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை சுற்றிலும், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறமும் கடந்த பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் மழைக்காலம் என்பதால் அங்கு தற்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.