Categories
உலக செய்திகள்

“சாலையெங்கும் சிதறிக்கிடந்த பணம்!”.. போட்டிபோட்டு எடுத்து சென்ற மக்கள்.. இணையத்தளத்தில் வெளியான வீடியோ..!!

அமெரிக்காவில், வங்கியில் டெபாசிட் செய்ய, டிரக் லாரி பணத்தை ஏற்றி சென்ற நிலையில், அதிலிருந்து விழுந்த பணத்தை, மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் San Diego என்ற நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் Interstate 5-ன் வடபகுதியில், Federal Reserve வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய ஒரு ட்ரக் சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று ட்ரக்கின் பின்கதவு திறந்ததால், அதிலிருந்த பணம்  காற்றில் பறந்து, சாலையெங்கும் சிதறிக்கிடந்தது.

அந்த வழியாக சென்ற மக்கள், தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்து பணத்தை எடுத்துச் சென்றனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, FBI மற்றும் California Highway Patrol அதிகாரிகள், சாலையில் பணத்தை எடுத்து சென்ற மக்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.

மேலும், சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி விட்டதால் அவர்களை தேடி வருகிறார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை வைத்து பணத்தை எடுத்து சென்றவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், இரண்டு நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் Vista-ல் இருக்கும் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்து விடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இல்லையெனில், வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு தொகை காணாமல் போனது? என்பது சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |