Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர்.

Image result for arrested

இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோனிஷா(25) என்பதும், இவர் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பைகளைத் திருடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து சுமார் 32 சவரன் நகைகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மோனிஷாவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |