விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தரணி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குருவி”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.