வலிமை பட வில்லன் கார்த்திகேயா லோகிதா ரெட்டியை இன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துள்ளார்.
நடிகர் கார்த்திகேயா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தமிழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ”வலிமை” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதனையடுத்து, இவர் தனது நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இவர் லோகிதா ரெட்டியை இன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணத்திற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.