மழையினால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஞ்சப்பனை கிராமத்தில் வசிக்கும் சிந்தாமணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி கன மழையினால் விழுந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமான வீட்டை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அரசு வழங்கும் நிவாரண தொகையான 4,100 ரூபாயை சிந்தாமணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அதிகாரிகள் உறுதியளித்தனர்.