Categories
மாநில செய்திகள்

மனதை பதறவைக்கும் மரணம்…. தமிழகத்தில் சோகம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூர் என்ற கிராமத்தில் வேதாச்சலம் (80) செந்தாமரை(72) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |