தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வீடுகளை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் மழைநீரால் நனைந்து ஊறிப்போயுள்ளது.
இந்நிலையில் நேற்று ஊட்டி லவ்டேல் அருகில் உள்ள அன்பு அண்ணா காலனியில் குடியிருப்புகளை ஒட்டியிருந்த தடுப்புச் சுவர் இடிந்து பக்கத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் 3 வீடுகள் அந்தரந்ததில் தொங்குகிறது. நீலகிரியில் நேற்றுடன் மழை முடிவடைந்தது.